புல்மோட்டையில் மீன்பிடித் துறைமுகம்
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புல்மோட்டை கிராமத்தில் மீன்பிடித்துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதற்காக மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே அதிகாரிகள் சகிதம் கடந்த வாரம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஆய்வு பணிகளைப் பார்வையிட்டார்.






